பிரத்தியேக வகுப்புக்கள்!
பிரஜாவுரிமைக்காண தயார்ப்படுத்தல்
நீங்கள் சுவிஸ் பிரஜாவுரிமை பெறுவதற்கு யோசித்துள்ளீர்களா, அல்லது அதற்காண விண்ணப்பத்தை ஏற்கனவே செய்துள்ளீர்களா?
சுவிசில் பிரஜாவுரிமை பெறுவதற்கு மத்திய அரசு பொதுவான நியதிகளை விதித்திருந்தாலும் மாநிலங்கள், கிராமங்களிற்கேற்றவகையில் பலவிதமான நடைமுறைகள் உள்ளன. வெளிநாட்டவர்கள் பிரஜாவுரிமை பெறுவதற்கு பல முன்னேற்பாடுகள் செய்யப்பட வேண்டியுள்ளது. விண்ணப்பப்படிவம் நிரப்புவதோடு மட்டும் அதற்கான ஆயத்தப்படுத்தல் முடிந்ததாகாது. சுவிஸ் நாட்டின் சட்டதிட்டம், இந்நாட்டின் புவியியல், சரித்திரவியல் மற்றும் அரசியல் சம்பந்தமான பலவித விடயங்களை நாம் அறிந்து வைத்திருக்க வேண்டிய தேவை இருக்கின்றது. அத்தகைய ஒரு தயார்படுத்தலின் பின்னரே பிரஜாவுரிமைக்கான தேர்வுக்குழுவின் வினாக்களிற்கு பதில் சொல்ல கூடியதாக இருக்கும்.
இந்த தயார் படுத்தலை நாம் நீங்கள் வசிக்கும் நகரசபை அல்லது கிராமசபையின் எதிர்பார்ப்பிற்கிணங்க உங்களுக்கென தனியான ஆவணமொன்றை தயாரித்து கற்பதற்கு இலகுவான வகையில் ஏற்படுத்தி தருவோம்.
வகுப்புக்கள்: சனிதோறும் 16:00 மணி தொடக்கம் 18:00 மணிவரை
ஆசிரியர்: திரு ச.கனகரத்தினம்
அனுமதிபெற்ற சுவிசின் டொச்மொழிபிரதேச நீதிமன்ற, காவல்துறை, கல்வித்துறை மற்றும் பிற இலாகாக்களிற்கான மொழிபெயர்ப்பாளர்.
தொடர்புகளிற்கு: 079 343 95 92
Dauer: 10x | Preis: CHF 1000.-
Anmelden